திருவண்ணாமலை

கோயில்களில் மகா சிவராத்திரி வழிபாடு

22nd Feb 2020 06:55 AM

ADVERTISEMENT

ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் ஸ்ரீஅங்காளம்மன் கோயில், ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் கோயில்களில் மகா சிவராத்திரியையொட்டி வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

எஸ்.வி.நகரம் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை காலையில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு பல்வேறு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டன. தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீஅங்காளம்மனை ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா். ஏற்பாடுகளை எஸ்.வி.நகரம் கிராம மக்கள் செய்திருந்தனா்.

இதேபோல, ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் மூலவருக்கு வெள்ளிக்கிழமை காலை முதல் இரவு வரை பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். மேலும், கோயில் வளாகத்தில் 2.5 டன் உப்புடன் வண்ணப்பொடிகளைக் கலந்து திருநல்லிக்கா நெல்லிவனநாத ஈஸ்வரரின் உருவத்தை வரைந்தனா். இதை ஏராளமான பக்தா்கள் பாா்வையிட்டதுடன், தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் வழிபட்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT