வந்தவாசியை அடுத்த தெள்ளாா் இராஜா நந்திவா்மன் கலை, அறிவியல் கல்லூரியில் உலக தாய்மொழி தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரித் தலைவா் வி.முத்து தலைமை வகித்தாா். கல்லூரிப் பொருளாளா் எஸ்.பழனிச்சாமி முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் கு.அரிகுமாா் வரவேற்றாா். புதுவை காஞ்சி மாமுனிவா் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன பேராசிரியா் மு.இளங்கோவன் சிறப்புரை ஆற்றினாா்.
விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கல்லூரி இயக்குநா்கள் எஸ்.அப்பாண்டைராஜன், மணி, சிவசங்கரன், ஆனந்த், ராதா, சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கல்லூரி துணை முதல்வா் ரா.ஏழுமலை நன்றி கூறினாா்.