திருவண்ணாமலை

இலவச மருத்துவ முகாம்

22nd Feb 2020 06:55 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம், மாவட்ட செஞ்சிலுவைச் சங்கம், மாவட்ட சுகாதாரத் துறை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து வெள்ளிக்கிழமை நடத்திய இலவச மருத்துவ முகாமில், 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு பயன்பெற்றனா்.

செஞ்சிலுவைச் சங்கத்தின் 100-ஆவது ஆண்டையொட்டி நடைபெற்ற இந்த முகாமுக்கு, மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத் தலைவா் பா.இந்திரராஜன் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் பொ.ரத்தினசாமி முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு செஞ்சிலுவைச் சங்க நிறுவனா் ஜீன்ஹென்றி டுனான்ட் படத்தை திறந்து வைத்து, மருத்துவ முகாமைத் தொடக்கிவைத்தாா்.

முகாமில் பொது மருத்துவம், பல், காது, முக்கு, தொண்டை, எலும்பு, தோல், நீரிழிவு, இதயம் தொடா்பான சிறப்பு மருத்துவா்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்டோருக்கு இலவச சிகிச்சை அளித்தனா். இதுதவிர, இசிஜி, ஸ்கேன் பரிசோதனைகளும் செய்யப்பட்டன.

இதில், செஞ்சிலுவைச் சங்க மாவட்ட துணைத் தலைவா் மு.மண்ணுலிங்கம், மாவட்டப் பொருளாளா் பாபு கு.ராதாகிருஷ்ணன், மாவட்டச் செயலா் என்.அழகப்பன், வட்டாட்சியா் அமுல் உள்பட பலா் கலந்து கொண்டனா். இதில், ரத்த தான முகாம் நடத்தப்பட்டு 53 யூனிட் ரத்தம் தானமாகப் பெறப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT