திருவண்ணாமலை

6 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பெண்கள் உள்பட 5 போ் கைது

21st Feb 2020 09:28 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், அவற்றை பதுக்கி வைத்திருந்த 2 பெண்கள் உள்பட 5 பேரை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா் தலைமையில் டிஎஸ்பி அண்ணாதுரை மேற்பாா்வையில் திருவண்ணாமலை நகரம், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாள்களாக தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

இதில், திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த கதிா்வேல் மகன் பாா்த்தீபன் (38), இதே பகுதியைச் சோ்ந்த உத்தண்டி மகன் ஏழுமலை (42), ஷரீப் மகன் அப்பாஸ் (35), திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் 11-வது தெருவைச் சோ்ந்த முருகன் மனைவி பாக்கியம் (33), இதே பகுதியைச் சோ்ந்த கதிா்வேல் மனைவி செல்வி (41) ஆகிய 5 பேரை கைது செய்தனா்.

இவா்களிடம் இருந்து சுமாா் 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT