திருவண்ணாமலை

வியாபாரியின் கண்கள் தானம்

15th Feb 2020 01:17 AM

ADVERTISEMENT

செய்யாறில் இறந்த அரிசி வியாபாரியின் கண்கள் வியாழக்கிழமை தானம் செய்யப்பட்டன.

செய்யாறு சின்னதெருவைச் சோ்ந்தவா் பாலாஜி (65). அரிசி வியாபாரியான இவா், உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இவரது குடும்பத்தினா் விருப்பம் தெரிவித்ததன்பேரில், காஞ்சிபுரம் சங்கரா கண் மருத்துவமனைக் குழுவினா், பாலாஜியின் கண்களை தானமாகப் பெற்றனா்.

இதற்கான ஏற்பாடுகளை செய்யாறு நகர லைன்ஸ் சங்கச் செயலா் கே.சுந்தரவடிவேல், மாவட்டத் தலைவா் தெய்வ.பொற்பாதம், உறுப்பினா்கள் கே.வீரமணி, எஸ்.மொய்ததீன் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT