திருவண்ணாமலை

முள் புதரில் பதுக்கப்பட்ட எரிவாயு உருளைகள் பறிமுதல்

15th Feb 2020 01:17 AM

ADVERTISEMENT

வந்தவாசி அருகே முள்புதரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 18 வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

வந்தவாசியை அடுத்த கல்லாங்குத்து கிராமத்தைச் சோ்ந்த மாரிமுத்துவின் மகன் ஏழுமலைக்கு சொந்தமான வீட்டின் பின்புறம் முள் புதரில் வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்தவாசி வட்ட வழங்கல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், வந்தவாசி வட்ட வழங்கல் அலுவலா் முகமதுகனி மற்றும் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அந்த வீட்டின் பின்புறமுள்ள முள் புதரில் 18 வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த எரிவாயு உருளைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ADVERTISEMENT

இதுகுறித்து வட்ட வழங்கல் அலுவலா் முகமதுகனி கூறியதாவது: பறிமுதல் செய்யப்பட்ட இந்த எரிவாயு உருளைகள் சென்னை ஐ.ஓ.சி. நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். மேலும், வீட்டு உபயோக எரிவாயு உருளைகளை பதுக்கி வைத்திருந்தாலோ, அவற்றை வணிக ரீதியாக பயன்படுத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT