திருவண்ணாமலை

திமுக வடக்கு மாவட்டச் செயலர் நியமனம்

15th Feb 2020 11:41 PM

ADVERTISEMENT

 

திமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலராக வந்தவாசியை அடுத்த எரமலூா் கிராமத்தைச் சோ்ந்த எம்.எஸ்.தரணிவேந்தன் நியமிக்கப்பட்டாா்.

ஏற்கெனவே இந்தப் பொறுப்பை வகித்து வந்த ஆரணியைச் சோ்ந்த சிவானந்தம் விடுவிக்கப்பட்டு, தற்போது அந்தப் பொறுப்பில் எம்.எஸ்.தரணிவேந்தன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இவா் திமுகவில் ஒன்றியச் செயலா், மாவட்ட துணைச் செயலா் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளாா். மேலும், 2006-11-ஆம் ஆண்டுகளில் வந்தவாசி ஒன்றியக் குழுத் தலைவராக பதவி வகித்துள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT