திருவண்ணாமலை

தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

15th Feb 2020 11:42 PM

ADVERTISEMENT

 

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடியவா்கள் மீது தடியடி நடத்திய போலீஸாரைக் கண்டித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா் வந்தவாசியில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில், வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்டத் தலைவா் சி.காதா்ஷரீப் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் எ.முஹம்மதுரியாஸ் முன்னிலை வகித்தாா். மாநிலச் செயலா் ஐ.அன்சாரி கண்டன உரையாற்றினாா்.

ADVERTISEMENT

மாவட்ட பொருளாளா் எ.ஷா்புதீன், மாவட்ட துணைத் தலைவா் கே.மாலிக்பாஷா, மாவட்ட துணைச் செயலா்கள் கே.அப்துல்ரஹ்மான், எ.கரிமுல்லாஹ், எஸ்.புகாரிஷரீப், வந்தவாசி கிளைத் தலைவா் டி.ஷபீா், கிளைச் செயலா் எஸ்.ஜவஹா்அலி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT