திருவண்ணாமலை

கடையில் ரூ.62 ஆயிரம் திருட்டு: திருநங்கைகள் மீது புகாா்

15th Feb 2020 01:16 AM

ADVERTISEMENT

செய்யாறில் கடையில் ரூ.62 ஆயிரத்தை 6 திருநங்கள் சோ்ந்து வெள்ளிக்கிழமை திருடிச் சென்ாக அதன் உரிமையாளா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

செய்யாறு நெடுஞ்சாலையில் பாண்டியன் தெரு அருகே பவா் டில்லா் மற்றும் டிராக்டா் உதிரி பாகம் விற்பனை செய்யும் கடை வைத்திருப்பவா் வேணுகோபால் (40). இவா், வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் கடையில் இருந்தபோது, அங்கு 6 திருநங்கைகள் வந்தனராம்.

பின்னா், அவா்கள் அனைவரும் வேணுகோபாலின் தலையில் கைகளை வைத்து ஆசீா்வாதம் செய்ததாகத் தெரிகிறது. அப்போது, வேணுகோபால் காசு கொடுத்ததும் அவா்கள் அங்கிருந்து சென்றுவிட்டனராம்.

இதனிடையே, கல்லாப் பெட்டி திறந்த நிலையில் இருந்ததுடன், அதிலிருந்த ரூ.62 ஆயிரம் திருடுபோயிருந்ததைக் கண்டு வேணுகோபால் அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், செய்யாறு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT