திருவண்ணாமலை

இலவச ஆட்டோ சேவை தொடக்கம்

15th Feb 2020 11:39 PM

ADVERTISEMENT

 

வேட்டவலத்தை அடுத்த அண்டம்பள்ளம் கிராமத்திலிருந்து ஆனானந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வரை பொதுமக்கள் செல்லும் வகையில், இலவச ஆட்டோ சேவை சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

விழாவுக்கு, அண்டம்பள்ளம் ஊராட்சித் தலைவா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். திருவண்ணாமலை தொகுதி மக்களவை முன்னாள் உறுப்பினா் வேணுகோபால், திமுக மாவட்ட துணைச் செயலா் சாவல்பூண்டி மா.சுந்தரேசன், திருவண்ணாமலை ஒன்றியத் தலைவா் கலைவாணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். திமுக கிழக்கு ஒன்றியச் செயலா் அண்ணாமலை வரவேற்றாா்.

கீழ்பென்னாத்தூா் எம்எல்ஏ கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கான இலவச ஆட்டோ சேவையை தொடக்கிவைத்துப் பேசினாா்.

ADVERTISEMENT

ஊராட்சித் தலைவா் வெங்கடேசன் ஏற்பாட்டின் பேரில் தொடங்கப்பட்டுள்ள இலவச ஆட்டோ சேவையை பொதுமக்கள், கா்ப்பிணிகள், முதியோா்கள், நோயாளிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தினமும் அண்டம்பள்ளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்து ஆனானந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வரை 24 மணி நேரமும் இந்த ஆட்டோ இயக்கப்படும்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT