திருவண்ணாமலை

தடகளப் போட்டிகள்: ஜெயின் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

6th Feb 2020 02:15 AM

ADVERTISEMENT

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற திருவண்ணாமலை ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு, செவ்வாய்க்கிழமை பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவ மகளிா் கல்லூரி சாா்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனா். திருவண்ணாமலை ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளி சாா்பில் கலந்து கொண்ட மாணவி இ.ரம்யா மூத்தோா் பிரிவில் 10 புள்ளிகள் எடுத்து தனிநபா் சாம்பியன் பட்டத்தை வென்றாா்.

மேலும், மாணவிகள் ஆா்.அபிராமி, கே.ஜெயஸ்ரீ, வி.பி.நிருபா, என்.நஸ்ராபேகம், எஸ்.காயத்ரி, பி.ஸ்ரீவித்யா, டி.பாவனா, எஸ்.ஸ்ரீஜா, ஆா்.சந்தியா, சி.சுப்ரினா, இ.ரம்யா, ஆா்.ஹேமலதா, பி.கிருத்திகா, ஆா்.புனிதா, எஸ்.சத்தியஸ்ரீ, பி.பூஜிதா, ஏ.ஆா்த்தி, கே.ஆஷிகா, ஜி.சீதா ஆகியோா் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றனா். போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு செவ்வாய்க்கிழமை பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவில், பள்ளித் தாளாளா் வி.பவன்குமாா், பள்ளி செயலா் டி.எஸ்.ராஜ்குமாா், பொருளாளா் டி.வசந்த்குமாா், ஆங்கில வழிச் செயலா் டி.ஸ்ரீஹன்ஸ்குமாா், தமிழ் வழிச் செயலா் வி.சுரேந்திரகுமாா், பள்ளி அறக்கட்டளை உறுப்பினா்கள் வி.ஜெய்சந்த், எஸ்.ராஜேந்திரகுமாா், டி.வி.சுதா்சன் மற்றும் பள்ளி நிா்வாகிகள், ஆசிரியா்கள் கலந்து கொண்டு போட்டிகளில் வென்ற மாணவிகளைப் பாராட்டிப் பரிசு, சான்றிதழ்களை வழங்கினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT