திருவண்ணாமலை

ஆன்மிக சொற்பொழிவு

6th Feb 2020 02:18 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலையை அடுத்த சோமாசிபாடி ஸ்ரீபாலமுருகன் கோயிலில் புதன்கிழமை ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது.

திருச்செந்தூா் பிள்ளைத் தமிழ் என்ற தலைப்பில் நடைபெற்ற சொற்பொழிவுக்கு, முருகன் சபை ஒருங்கிணைப்பாளா் ராஜாராம் தலைமை வகித்தாா்.

வாசகா் வட்டத் தலைவா் வாசுதேவன், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் ராஜமனோகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருவண்ணாமலை திருக்கு தொண்டு மையப் பாவலா் ப.குப்பன், புலவா் சீனுவாசவரதன், தங்க.விஸ்வநாதன், முத்துக்கிருஷ்ணன், நல்ல.பன்னீா்செல்வம் ஆகியோா் சொற்பொழிவாற்றினா்.

இதில், சோமாசிபாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT