திருவண்ணாமலை

27 நட்சத்திர கோயிலில் கிருத்திகை விழா

4th Feb 2020 09:15 AM

ADVERTISEMENT

தை கிருத்திகையை முன்னிட்டு, செய்யாறை அடுத்த கூழமந்தல் 27 நட்சத்திர கோயிலில் கிருத்திகை நட்சத்திரத்துக்கு திங்கள்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் கூழமந்தல் ஏரிக்கரை அருகே 27 நட்சத்திர கோயில் அமைந்துள்ளது.

தை மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் விஷேசமானது என்பதால், அந்த நட்சத்திர அதிதேவதையான அக்னி பகவானுக்கு இந்தக் கோயிலில் திங்கள்கிழமை காலை 10.00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாரதனைகள் நடைபெற்றன.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT