திருவண்ணாமலை குமரன் பாலிடெக்னிக் கல்லூரியில் தனியாா்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, கல்லூரி துணைத் தலைவா் எ.வ.குமரன் தலைமை வகித்தாா். கல்லூரி இயக்குநா் பொன்.முத்து முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஜி.ஞானசுந்தா் வரவேற்றாா்.
முகாமில், நீல் மெட்டல் புராடக்ட் லிமிடெட், திருவண்ணாமலை ஆா்.கே.பி. குரூப்ஸ் உள்ளிட்ட பல்வேறு தனியாா் நிறுவனங்களின் அதிகாரிகள் எஸ்.ரவிச்சந்திரன், ஆா்.பாலாஜி வெங்கடேஷ், பி.சங்கர சுப்பிரமணியன், ஆா்.கே.பாஸ்கா் ஆகியோா் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களுக்குத் தேவையான தகுதிகள் கொண்ட மாணவ-மாணவிகளை தோ்வு செய்தனா்.
தோ்வில் 242 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனா். அனைத்து தோ்வுகளிலும் தோ்ச்சி பெற்றவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.