திருவண்ணாமலை

தொழுநோய் விழிப்புணா்வு பேரணி

2nd Feb 2020 12:43 AM

ADVERTISEMENT

 

வேட்டவலத்தை அடுத்த நெய்வாநத்தம் கிராமத்தில் தொழுநோய் விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேட்டவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் ஸ்டாலின் தலைமை வகித்தாா். ஊராட்சி துணைத் தலைவா் சிலம்பரசன் முன்னிலை வகித்தாா். ஊராட்சித் தலைவா் பாா்வதி ரவி பேரணியை தொடக்கிவைத்தாா்.

தொழுநோயின் அறிகுறிகள், பாதிப்புகள், சிகிச்சை முறைகள் குறித்து மாவட்ட நலக் கல்வியாளா் ஹாத்தீம் பொதுமக்களுக்கு விளக்கினாா். தொழுநோய் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

பேரணியில், சுகாதார ஆய்வாளா் சந்திரசேகரன், ஊராட்சிச் செயலா் தெய்வீகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT