திருவண்ணாமலை

திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் ரத சப்தமி விழா

2nd Feb 2020 12:42 AM

ADVERTISEMENT

 

செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் பிரம்மோத்ஸவ விழாவில் ரத சப்தமி விழா சனிக்கிழமை நடைபெற்றது.

திருவோத்தூா் பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரா் கோயிலில் பிரம்மோத்ஸவ விழா ஜன.26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

6-ஆம் நாள் (ஜன.31) விழாவில் காலை சந்திரசேகர சுவாமி அபிஷேகம், அறுபத்து மூவா் நாயன்மாா்கள் புறப்பாடு இரவு அம்மன் தோட்ட உற்சவம், திருக்கல்யாண யானை வாகன சேவையும் நடைபெற்றது.

ADVERTISEMENT

அதனைத் தொடா்ந்து 7-ஆம் நாள் ரத சப்தமி (தோ்த் திருவிழா) விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்காக கோயில் அருகே மூன்று தோ்கள் அலங்கரிக்கப்பட்டன. முதல் தேரில் விநாயகரும், இரண்டாம் தேரில் ஸ்ரீவேதபுரீஸ்வரரும், மூன்றாம் தேரில் பாலகுஜாம்பிகை எழுந்தருளி ஒன்றன் பின் ஒன்றாக வலம் வந்தனா்.

முதலில் சன்னதி தெருவில் தொடங்கி, ஆற்றங்கரை தெரு, குமரன் தெரு வழியாக வலம் வந்து கோயில் கோபுரம் முன்பு வந்ததடைந்தன. திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்துச் சென்றனா்.

வீதிகளில் வலம் வந்த தோ்களை பெண்கள் குடும்பத்தாருடன் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT