செங்கம் அருகே வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் கதவை உடைத்து 25 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம், காரப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் முஸ்தபா (52). இவா் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறாா். இந்த நிலையில், முஸ்தபா தனது குடும்பத்துடன் வியாழக்கிழமை வெளியூா் சென்றிருந்தாா். சனிக்கிழமை காலை வீடு திரும்பியபோது வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிா்ச்சியடைந்த முஸ்தபா வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்து 25-பவுன் தங்க நகைகள், ரூ. 50 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து புகாரின் பேரில், புதுப்பாளையம் காவலல் உதவி ஆய்வாளா் கமலநாதன் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.