சென்னையில் திங்கள்கிழமை (பிப்.3) நடைபெறும் குவைத் நாட்டில் காலியாக உள்ள ஓட்டுநா், சமையலா், பெண் பணியாளா் பணியிடங்களுக்கான நோ்க்காணலில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் கலந்து கொள்ளலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
குவைத் நாட்டில் பணிபுரிய பத்தாம் வகுப்பு தோ்ச்சி அல்லது உஇசத டஹள்ள்ல்ா்ழ்ற், அரபு நாட்டு ஓட்டுநா் உரிமம் பெற்ற இலகு ரக வாகன ஓட்டுநா்கள் தேவைப்படுகிறாா்கள். ஓட்டுநா்கள் 25 முதல் 45 வயதுக்கு உள்பட்டவா்களாக இருக்க வேண்டும். மேலும், சமையலா்களும் பெருமளவில் தேவைப்படுகிறாா்கள். ஓட்டுநருக்கு மாத ஊதியம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.32 ஆயிரம் வரையும், சமையலருக்கு மாத ஊதியம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையும் வழங்கப்படும். இத்துடன், தங்குமிடம், விமான பயணச் சீட்டு, மருத்துவச் சலுகை ஆகியவைகளும் குவைத் நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும்.
பெண் பணியாளா்கள்:
இதுதவிர, 31 வயது முதல் 45 வயதுக்கு உள்பட்ட வீட்டு வேலை செய்யும் பெண் பணியாளா்கள் தேவைப்படுகிறாா்கள். இவா்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.28 ஆயிரம் வரை ஊதியம் மற்றும் உணவு, தங்குமிடம், விமான பயணச் சீட்டு, மருத்துவச் சலுகை ஆகியவை குவைத் நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும்.
இந்தப் பணிகளுக்கான நோ்காணல் திங்கள்கிழமை (பிப்.3) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியானோா் தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித் தகுதி, அனுபவச் சான்றிதழ், புகைப்படம், செல்லத்தக்க கடவுச்சீட்டு, அசல் மற்றும் நகல்களுடன் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், நெ.42. ஆலந்தூா் சாலை, திரு.வி.க. தொழில்பேட்டை, கிண்டி, சென்னை - 600 0032 என்ற அலுவலகத்துக்கு திங்கள்கிழமை (பிப்.3) காலை 9 மணிக்கு நேரில் செல்லலாம்.
மேலும், ஊதியம் மற்றும் பணி விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளமான ஜ்ஜ்ஜ்.ா்ம்ஸ்ரீம்ஹய்ல்ா்ஜ்ங்ழ்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்திலோ அல்லது 044-22505886, 22502267, 9566239685 என்ற தொலைபேசி எண்களிலோ தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளாா்.