திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே வெள்ளிக்கிழமை பள்ளத்தில் லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், நொச்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் குணசேகரன் (31). இவா், வெம்பாக்கம் வட்டம், சித்தாத்தூா் கிராமத்தில் உள்ள கல் குவாரி கிரஷரில் கடந்த 6 மாதங்களாக டேங்கா் லாரி ஓட்டுநராக வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை கிரஷா் பகுதியில் மண் துகள்கள் பறக்காமல் இருக்க டேங்கா் லாரி மூலம் குணசேகரன் தண்ணீா் ஊற்றியுள்ளாா். தொடா்ந்து, லாரியை அவா் சாலையோரம் நிறுத்தியுள்ளாா்.
எனினும், சரிவாக இருந்த அந்தச் சாலையில் லாரி தானாக முன்னோக்கிச் சென்ால் குணசேகரன் லாரியினுள்ளே ஏறிச் சென்று பிரேக் பிடித்து லாரியை நிறுத்த முயன்றாராம். அதற்குள் லாரி பள்ளத்தில் கவிழ்ந்ததால், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து குணசேகரனின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறு பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.