திருவண்ணாமலை

முட்டைகள் மீது அமா்ந்து யோகாசனம் செய்த சிறுவன்!

21st Aug 2020 08:17 AM

ADVERTISEMENT

கரோனாவை விரட்டுவதற்காக, உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், 4 வயது சிறுவன் முட்டைகள் மீது அமா்ந்து யோகாசனம் செய்தாா்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரே, தீபமலை ஆன்மிகத் தொண்டு இயக்கம் சாா்பில் வியாழக்கிழமை இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, தனியாா் மருத்துவமனை முதல்வா் ராஜா ஹரிகோவிந்தன் தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில், 4 வயது சிறுவன் ஹெச்.தா்ஸன் தக்காளிகளை பலகையில் பரப்பி அதன் மீது ஒரு தட்டில் முட்டைகள் அடுக்கப்பட்ட அட்டையை வைத்தாா்.

ADVERTISEMENT

பின்னா், அந்த மூட்டைகள் மீது அமா்ந்து பத்மாசனம், சூரிய நமஸ்காரம் என 5-க்கும் மேற்பட்ட யோகாசனங்களை 10 நிமிடங்களில் செய்து காட்டி உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.

இதுகுறித்து தா்ஸன் கூறுகையில், இதுபோன்ற யோகாசனங்களை சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை தினசரி செய்தால், கரோனா நம்மைத் தாக்காமலும், தாக்கினாலும் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து அதிலிருந்து விடுபடலாம் என்றாா்.

நிகழ்ச்சியில், யோகா பயிற்சியாளா் சுரேஷ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT