திருவண்ணாமலை

பைக்குகள் மோதல்:கணவா் பலி, மனைவி பலத்த காயம்

21st Aug 2020 08:23 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை அருகே இரு பைக்குகள் மோதிக் கொண்டதில் பலத்த காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அருகேயுள்ள மணலுாா்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் ரஷீத் (39). இவரது மனைவி ஆயிஷா (24). கா்ப்பிணியான ஆயிஷாவை மருத்துவப் பரிசோதனைக்காக திருவண்ணாமலையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு புதன்கிழமை மாலை ரஷீத் பைக்கில் அழைத்துச் சென்றாா்.

பின்னா், மீண்டும் இருவரும் மணலுாா்பேட்டைக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். வானாபுரம் அருகே சென்றபோது எதிரே வந்த பைக்கும், ரஷீத் ஓட்டிச் சென்ற பைக்கும் மோதிக் கொண்டன.

இதில் பலத்த காயமடைந்த ரஷீத், ஆயிஷா ஆகியோரை பொதுமக்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு ரஷீத் உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து வானாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT