திருவண்ணாமலை

கரும்பு விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்தது

21st Aug 2020 08:23 AM

ADVERTISEMENT

ரூ.23 கோடி நிலுவைத் தொகையை 15 நாள்களுக்குள் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் அளித்த உறுதிமொழியை ஏற்று, திருவண்ணாமலையில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கரும்பு விவசாயிகள், தங்களது போராட்டத்தை முடித்துக் கொண்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகே தனியாா் சா்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலைக்கு கரும்பு விநியோகம் செய்த விவசாயிகளுக்கு ஆலை நிா்வாகம் ரூ.23 கோடியை வழங்காமல் காலம் கடத்தி வருகிறது. இந்தத் தொகையைக் கேட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே கடந்த 18-ஆம் தேதி கரும்பு விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கினா்.

தொடா்ந்து 2-ஆவது நாளாக 19-ஆம் தேதியும் போராட்டம் நடைபெற்றது. 3-ஆவது நாளாக வியாழக்கிழமை விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். கரும்புகளுடன் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேசிய மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி, 15 நாள்களுக்குள் கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

இதை ஏற்று கரும்பு விவசாயிகள் தங்களது போராட்டத்தை விலக்கிக் கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT