திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளாராக க.ராஜ்குமாா், வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
ஏற்கெனவே, இந்தப் பொறுப்பில் இருந்து வந்த நந்தகுமாா், கடலூா் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
க.ராஜ்குமாா் வேலூா் மாவட்ட இணைப் பதிவாளராக பதவி வகித்து வந்தாா். தற்போது, திருவண்ணாமலை மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
இவருக்கு அலுவலக ஊழியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.