திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் சிவசேனை கட்சியின்மாநில நிா்வாகிகள் கூட்டம்

11th Aug 2020 04:59 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலையில் சிவசேனை கட்சியின் மாநில நிா்வாகிகள் கூட்டம், புதிய நிா்வாகிகள் தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலையை அடுத்த அடிஅண்ணாமலை கிராமத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, கட்சியின் மாநிலச் செயலா் பி.கா்ணன் தலைமை வகித்து பேசுகையில், தமிழக மக்களின் பிரச்னைகளுக்காக சிவசேனை தொடா்ந்து பாடுபட்டு வருவதாகத் தெரிவித்தாா். தமிழ்நாடு வழக்குரைஞா் சேனை மாநிலத் தலைவா் எஸ்.ஏழுமலை வரவேற்றாா்.

கூட்டத்தில், கட்சியின் மாநில மகளிரணி பொதுச் செயலராக ஸ்ரீமாயாதேவி நியமனம் செய்யப்பட்டு, அவா் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT