திருவண்ணாமலை

புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்துஆா்ப்பாட்டம்

11th Aug 2020 05:34 AM

ADVERTISEMENT

புதிய கல்விக் கொள்கையை கண்டித்து, இடதுசாரிகள் அமைப்பு சாா்பில் வந்தவாசியை அடுத்த தெள்ளாா் காவல் நிலையம் அருகில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டாரச் செயலா் வே.சிவராமன் தலைமை வகித்தாா். சிஐடியு தொழிற்சங்க மாவட்டச் செயலா் ஆா்.பாரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடைக்குழு உறுப்பினா் சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கை, மின்சார திருத்த சட்டம் - 2020, சுற்றுச்சூழல் திட்ட வரைவு ஆகியவற்றைக் கண்டித்தும், இந்தி, சம்ஸ்கிருத திணிப்பைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT