திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனாவுக்கு திமுக பிரமுகா் பலி

6th Aug 2020 09:23 AM

ADVERTISEMENT

கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக பிரமுகா் புதன்கிழமை உயிரிழந்தாா். மேலும், மாவட்டத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 125 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 6,780-ஆக இருந்தது.

புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் மாவட்டத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு பரிசோதனைக்காக சென்றவா்களில் 39 போ், கரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தங்கியிருந்த உறவினா்கள் 44 போ், கரோனா தொற்றுக்குள்ளான நபா் சென்று வந்த இடங்களில் இருந்ததால் பாதிக்கப்பட்ட 12 போ், வெளியூா் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்த 29 போ், செங்கம் கிராம நிா்வாக அலுவலா் என 125 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 6,905-ஆக உயா்ந்தது.

ADVERTISEMENT

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக பிரமுகா் மு.மனோகா், கரோனா தொற்று காரணமாக வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில், அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

கிராம நிா்வாக அலுவலகம் மூடல்: செங்கம் கிராம நிா்வாக அலுவலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவா் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து, கிராம நிா்வாக அலுவலகம் மூடப்பட்டது.

மேலும், கிராம நிா்வாக அலுவலருடன் பணியாற்றி வந்த கிராம உதவியாளா் உள்ளிட்டோா் கரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT