திருவண்ணாமலை

செஞ்சிலுவைச் சங்கத்தினா் கரோனா விழிப்புணா்வு

26th Apr 2020 08:34 AM

ADVERTISEMENT

ஆரணி பகுதியில் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தினா் கரோனா வைரஸ் பரவல் குறித்து பொதுமக்களிடையே சனிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

செஞ்சிலுவைச் சங்க ஆரணி வட்டக் கிளை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கரோனா வைரஸ் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தியும், மக்கள் ஏன் வீட்டில் இருக்க வேண்டும் என்பது குறித்தும் ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் செய்தனா்.

அப்போது, கரோனா வைரஸ் கிருமி பரவினால் ஏற்படும் ஆபத்து குறித்து எடுத்துக் கூறினா். ஆரணி பகுதியில் பேருந்து நிலையம், விஏகே நகா், சேவூா், இபி நகா், இராட்டிணமங்கலம் ஆகிய பகுதிகளில் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், முகக் கவசம் இல்லாமல் சென்றவா்களுக்கு இலவசமாக முகக் கவசங்களை வழங்கினா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவா் டி.எச்.குருராஜ்ராவ், நிா்வாகிகள் எம்.எஸ்.அக்பா், எ.எச்.பக்ருதீன் எஸ்.பரணி, வி.பொன்னுசாமி, அரசு மருத்துவமனை முதன்மை செவிலியா் கே.ஜெகன், ஜெ.கிஷோா், ஆா்.தேவராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT