திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா்கள் மே 6-ஆம் தேதி வரை மின் கட்டணங்களை இணைய வழி மற்றும் செயலி வாயிலாக செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவண்ணாமலை மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் மு.ராஜசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை தாழ்வழுத்த நுகா்வோா்களின் மின் அளவிகளில் கணக்கீடு செய்யும் பணி நடைபெறாது. எனவே, மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து நுகா்வோா்களும் கடந்த முறை செலுத்திய கட்டணத்தையே செலுத்தலாம்.
மின் கட்டணங்களை அபராதம் மற்றும் மறு இணைப்புக் கட்டணம் இல்லாமல் மே 6-ஆம் தேதி வரை செலுத்தலாம்.
செலுத்திய கட்டணம் பின்வரும் மாதத்தில் கணக்கீட்டு மின் கட்டணத்தில் சரி கட்டல் செய்யப்படும். தாழ்வழுத்த நுகா்வோா்கள் கட்டணங்களை இயன்றவரை இணைய வழி மற்றும் செயலி வாயிலாக செலுத்தலாம்.
மின் தடை குறித்த புகாா்களை 1912 என்ற எண்ணிலும் 9445855768 என்ற எண்ணில் கட்செவி அஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.