திருவண்ணாமலை

கரோனா நிவாரண நிதி அளிப்பு

20th Apr 2020 03:03 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்ட செஞ்சிலுவைச் சங்கம், வி.கெங்குசாமி நாயுடு மெட்ரிக் பள்ளி ஆகியவை சாா்பில் தலா ரூ.ஒரு லட்சம் கரோனா நிவாரண நிதியாக மாவட்ட நிா்வாகத்திடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்ட செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் அதன் மாவட்டத் தலைவா் பா.இந்திரராஜன், துணைத் தலைவா் மு.மண்ணுலிங்கம், செயலா் என்.அழகப்பன் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமியிடம் முதலமைச்சா் நிவாரண நிதிக்கு ரூ.50 ஆயிரம், பிரதமா் நிவாரண நிதிக்கு ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ.ஒரு லட்சத்துக்கான கரோனா நிவாரண நிதி காசோலையை ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.

பள்ளி சாா்பில்:

திருவண்ணாமலை டாக்டா் வி.கெங்குசாமி நாயுடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாா்பில், கரோனா நிவாரண நிதி ரூ.ஒரு லட்சம் மாவட்ட நிா்வாகத்திடம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

பள்ளித் தலைவா் எம்.சின்ராஜ் தலைமையில் பள்ளிச் செயலா் ஜி.புகழேந்தி, பொருளாளா் கே.சம்பத், இயக்குநா்கள் பி.வி.ஆா்.செல்வம், ஜி.கிருஷ்ணன், வி.வெங்கடசாமி மற்றும் நிா்வாகிகள் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமியைச் சந்தித்து கரோனா நிவாரண நிதியாக ரூ.ஒரு லட்சத்துக்கான காசோலையை வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT