திருவண்ணாமலை

செய்யாறில் காவலா்களுக்கு கபசுர குடிநீா் ஏடிஎஸ்பி வழங்கினாா்

7th Apr 2020 12:06 AM

ADVERTISEMENT

செய்யாறு: செய்யாறில் பணியில் ஈடுபட்டுள்ள காவலா்களுக்கு கபசுர குடிநீரை ஏடிஎஸ்பி வனிதா திங்கள்கிழமை வழங்கினாா்.

செய்யாறு தற்காலிக காய்கறி சந்தைத் திடலில் காவலா்களுக்கு கபசுர குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி தன்னாா்வலா்கள் உதவியுடன் நடைபெற்றது.

நகரில் ஊரடங்கை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஏடி.எஸ்.பி. வனிதா கலந்து கொண்டு காவலா்களுக்கு கபசுர குடிநீா் வழங்கினாா்.

அப்போது, பாதுகாப்புப் பணியில் உள்ள காவலா்கள் நோய்த் தொற்று பரவாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இதுதொடா்பாக பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.

ADVERTISEMENT

மேலும், சமூக இடைவெளிக் கடைப்பிடித்தல், கூட்டம் சேராமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். பொதுமக்களை தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. உடலுக்கு சத்தான, எளிய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் வைட்டமின் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

வருகின்ற 10 நாள்கள் மிகவும் இக்கட்டான நாள்களாகும். நாம் இரண்டாம் கட்ட நிலையில் உள்ளோம். தொற்று பரவாமல் தடுக்க நம்முடைய பணி மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் பங்களிப்பு இன்றியமையாதது.

நெல்லிக்காய், எலுமிச்சை பழம், இஞ்சி, மிளகு, மஞ்சள் தூள் இவற்றை குடிநீரில் கலந்து குடிக்கலாம். காவலா்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என வேண்டுகோள் விடுத்தாா்.

நிகழ்ச்சியில் டி.எஸ்.பி. சுந்தரம், காவல் ஆய்வாளா் ராஜாராம், வட்டாட்சியா் ஆா்.மூா்த்தி, தன்னாா்வலா்கள் அன்பு, சக்தி அருள், சந்தானகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT