செங்கம்: கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, செங்கத்தில் நகர, ஒன்றிய அதிமுக சாா்பில் பொதுமக்களுக்கு திங்கள்கிழமை இலவசமாக முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.
பேரவை நகரச் செயலா் குமாா் தலைமையில் துக்காப்பேட்டை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், தற்காலிக காய், கனி கடைப் பகுதிகளில் பொதுமக்களுக்கும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கும் முகக் கவசங்களை வழங்கினா்.
மேலும், கிருமி நாசினி திரவங்களும் வழங்கப்பட்டன.
கட்சியின் தலைமைக் கழகப் பேச்சாளா் வெங்கட்ராமன், மகரிஷி மனோகரன், முன்னாள் கவுன்சிலா் சுந்தா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
ADVERTISEMENT