திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்களில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கும் மிகாமல் உள்ள பதிவுதாரர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியை பதிவு செய்து உயிர்ப் பதிவேட்டில் 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் வேலை நாடுநர்களுக்கு வேலை வாய்ப்பற்றோர்களுக்கான உதவித்தொகை 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அதிகளவில் பயன்பெறும் வகையில் விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.72 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பதிவுதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்தார்.