வந்தவாசியை அடுத்த மழையூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் லதா தலைமை வகித்தார். சங்கச் செயலர் வெங்கடேசன் வரவேற்றார்.
சங்கத் தலைவர் பி.முனிரத்தினம் விவசாயிகளுக்கு கடன் அட்டைகளை வழங்கினார். மத்திய கூட்டுறவு வங்கியின் கள மேலாளர் கந்தசாமி கடன் அட்டையை பயன்படுத்தும் முறை குறித்து விளக்கிப் பேசினார். விழாவில் 60 பேருக்கு கடன் அட்டைகள் வழங்கப்பட்டன.