திருவண்ணாமலை

ஒலிம்பியாட் தேர்வில் ஆரணி மாணவர்கள் சிறப்பிடம்

13th Sep 2019 07:13 AM

ADVERTISEMENT

தேசிய கணித ஒலிம்பியாட் தேர்வில் ஆரணி ஆரஞ்ச் பிரிட்டிஷ் அகாதெமி பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.
2018 - 19ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற தேசிய அளவிலான கணித ஒலிம்பியாட் தேர்வில் ஆரஞ்ச் பிரிட்டிஷ் அகாதெமி பள்ளியைச் சேர்ந்த 320-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
மாணவி பி.பிரகதி தேர்வில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்து தங்கப்பதக்கம், பரிசுக் கோப்பையை வென்றார். தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளர் கே.சிவக்குமார், துணைத் தாளாளர் அபர்ணாசிவக்குமார், முதல்வர் செந்தில் 
உள்ளிட்டோர் பாராட்டினர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT