திருவண்ணாமலை

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 507 மனுக்கள்

10th Sep 2019 08:30 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 507 மனுக்கள் வரப்பெற்றன.
கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி பொதுமக்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, ஜாதிச் சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 507 மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில், சமூக பாதுகாப்புத் திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகியவை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் வில்சன் ராஐசேகர், மகளிர் திட்ட இயக்குநர் பெ.சந்திரா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பரிமளா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் லாவண்யா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சு.சரவணன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT