திருவண்ணாமலை

பட்டங்கள் பெற்று சமூகப் பணியிலும் ஈடுபட வேண்டும்: தொல்.திருமாவளவன்

10th Sep 2019 08:31 AM

ADVERTISEMENT

மாணவர்கள் பட்டங்கள் பெற்று பணிக்குச் செல்வது மட்டும் அல்லாமல்  சமூகப் பணியிலும் ஈடுபட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தினார்.
ஆரணி ஜி.பி.சி. கல்வி நிறுவனம் சார்பில் திங்கள்கிழமை பட்டமளிப்பு  விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஜி.பி.சி கல்வி நிறுவனத்தின் நிறுவனர் கோ.பிரபாகரன் வரவேற்றார். 
இதில், கல்வியியல் கல்லூரியில் பயின்ற மற்றும் கலைக் கல்லூரியில் கல்வி பெற்ற மாணவர்கள் 125 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
சிறப்பு விருந்தினராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது: 
கல்வி என்பது எந்த வயதிலும் கற்கலாம். குறிப்பிட்ட வயதில் மட்டும் படிப்பது என்பது கிடையாது. 
ஆரணியில் உள்ள ஜி.பி.சி. கல்வி நிறுவனம் 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று பட்டங்களைப் பெற்றுள்ளனர். 
கல்வி என்பது நம்மை அறிந்து கொள்வதற்கும், நம்மைச் சுற்றியுள்ள பிரபஞ்சத்தை தெரிந்து கொள்வதற்கும், பிறருக்கு வழிகாட்டியாகவும் விளங்க உதவுகிறது. பட்டங்களைப் பெற்று பணிக்கு மட்டும் செல்லாமல் சமூகப் பணியிலும் ஈடுபட வேண்டும் என்றார். 
நிகழ்ச்சியில் போளூர் ஸ்ரீரேணுகாம்பாள் குழும கல்லூரிகளின் செயலர் ஆர்.புவனா, வந்தவாசி துரை கல்வியியல் கல்லூரி முதல்வர் கு.பிரேமா, போளூர் ஸ்ரீராமஜெயம் கல்லூரி முதல்வர் கே.பழனி, கலசப்பாக்கம் செழியன் கல்வியியல் கல்லூரி துணை முதல்வர் கே.ஏழுமலை, அரசு ஊழியர்கள் ஐக்கிய பேரவை மாவட்டப் பொருளாளர் ஏ.சந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் ம.கு.பாஸ்கரன், தொகுதிச் செயலர் என்.முத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT