திருவண்ணாமலை

ஆசிரியர்களுக்கு சிறப்பு கருத்தரங்கம்

10th Sep 2019 08:33 AM

ADVERTISEMENT

செங்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீராமகிருஷ்ணா ஆஸ்ரமத்தில் ஆசிரியர் தினத்தையொட்டி, அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், செங்கம் ஸ்ரீராமகிருஷ்ணா அறக்கட்டளை நிர்வாகக் குழுத் தலைவர் எஸ்.பாண்டுரங்கன் வரவேற்றார். 
தொடர்ந்து ஆஸ்ரமத்தில் பஜனை, குத்துவிளக்கு ஏற்றுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர், நாட்றாம்பள்ளி ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி தியாகராஜானந்தர் தலைமையுரை ஆற்றினார்.
ஓய்வுபெற்ற திருவண்ணாமலை மாவட்டக் கல்வி அலுவலர் மதியழகன் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்து சிறப்புரையாற்றினார்.  சென்னை மயிலாப்பூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் மேலாளர் சுவாமி விமூர்த்தானந்தரின்  சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. 
அன்று மாலை அவர் ஆசிரியர்களுக்கான கருத்துரைகள் மற்றும் தற்கால மாணவர்களின் மனநிலை மாற்றம் கொள்ள அறிவுரைகள் வழங்கிப் பேசினார்.  இதைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கும், பக்தர்களுக்கும் ஆசியுரை வழங்கினார். 
ஆன்மிக சொற்பொழிவாளர் ம.தனஞ்செயன் தற்போதிய ஆசிரியர்,  மாணவர்கள் மனநிலை குறித்து விளக்கிப் பேசினார். 
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சுவாமி விமூர்த்தானந்தர்  நினைவுப் பரிசு வழங்கி ஆசீர்வதித்தார். 
நிகழ்ச்சியில் செங்கம் ஸ்ரீராமகிருஷ்ணா, சுவாமி விவேகானந்தா, ஸ்ரீசாரதா தேவி அறக்கட்டளை நிர்வாகிகள், பக்தர்கள், ஆசிரியர்கள் திரளாக கந்துகொண்டனர். 
செங்கம் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளிச் செயலர் எஸ்.ராமமூர்த்தி நன்றி கூறினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT