திருவண்ணாமலை

விநாயகர் சிலைகள் ஊர்வலம்

7th Sep 2019 09:04 AM

ADVERTISEMENT

ஆரணியில் இந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலைகள் கரைப்பு ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆரணி அண்ணா சிலை அருகிலிருந்து தொடங்கிய ஊர்வலத்தில், 10-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பங்கேற்றன. இதில், சிறப்பு விருந்தினராக இந்து முன்னணி மாநில பொதுச் செயலர் பரமேஸ்வரன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்து முன்னணி நகரத் தலைவர் தாமோதரன், நகரச் செயலர் நாகராஜன், தன்னார்வலர் எம்.என்.சேகர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இஞ்சிமேடு சிவாலய நிர்வாகியும், முன்னாள் ஆட்சியருமான ஐ.ஆர்.பெருமாள், வேலூர் முன்னாள் மேயரும், பாஜக மகளிரணி மாநிலச் செயலருமான கார்த்தியாயினி ஆகியோர் கொடியசைத்து ஊர்வலத்தை தொடக்கிவைத்தனர்.
பாஜக மாவட்ட துணைத் தலைவர் பி.கோபி, தொகுதிச் செயலர் எஸ்.மூர்த்தி, மாவட்டச் செயலர் கோவிந்தராஜ், நகரத் தலைவர் தரணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆரணி அண்ணா சிலை அருகிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கிய ஊர்வலம், சந்தை சாலை, மணிக்கூண்டு, பழைய பேருந்து நிலையம், எம்ஜிஆர் சிலை, வடக்குமாட வீதி, பெரியகடை வீதி, மண்டி வீதி, காஜிவாடை, ராமகிருஷ்ணாபேட்டை வழியாக பையூர் பாறை குளத்துக்கு சென்றது. பின்னர், அங்கு சிலைகள் கரைக்கப்பட்டன.
ஊர்வலத்தையொட்டி, ஆரணியில் உள்ள அனைத்து மசூதிகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT