திருவண்ணாமலை

செங்கத்தில் அரசு மாணவர் விடுதிகளில் ஆய்வு

7th Sep 2019 09:05 AM

ADVERTISEMENT

செங்கத்தில் அரசு மாணவர், மாணவிகள் விடுதிகளில் பயிற்சி ஆட்சியர் அனந்த் குமார் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
செங்கம் பகுதியில் உள்ள அரசு மாணவர், மாணவிகள் விடுதிகளில் மாணவ, மாணவிகள் குறைவாக உள்ளதாகவும், அவர்கள் இரவு வேளையில் விடுதியில் தங்காமல் வீடுகளுக்குச் செல்வாதகவும் மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் சென்றன.
அதனடிப்படையில், திருவண்ணாமலை மாவட்ட பயிற்சி ஆட்சியர் அனந்த் குமார், செங்கம் மேல்பாளையம் பகுதியில் உள்ள அரசு மாணவர் விடுதி, தளவாநாய்க்கன்பேட்டை பகுதியில் உள்ள மாணவிகள் விடுதியில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, மாணவிகள் விடுதியில் விடுதிக் காப்பாளர் விடுமுறையில் இருந்ததால், அங்கு பதிவேடுகளை ஆய்வு செய்ய முடியவில்லை. மாணவர்கள் விடுதியில் பதிவேடுகளை ஆய்வு செய்த போது, பதிவேடுகளில் உள்ளதைவிட குறைவான மாணவர்களே விடுதிக்கு வருவதும், அங்கு உணவு முறைப்படி தயார் செய்து மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர், மாவட்ட விடுதிக் காப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என பயிற்சி ஆட்சியர் அனந்த் குமார் தெரிவித்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT