திருவண்ணாமலை

விநாயகர் சிலை ஊர்வலம் பொது வழியில் செல்ல அனுமதிக்க வேண்டும்: இந்து முன்னணி கோரிக்கை

4th Sep 2019 10:10 AM

ADVERTISEMENT

செய்யாறில் விநாயகர் சிலை ஊர்வலத்தை பொது வழியில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்தது.
இதுதொடர்பாக, செய்யாறு நகர அனைத்து அரசியல் கட்சிப் பிரமுகர்கள் சார்பில் கையெழுத்து பெறப்பட்ட மனு, இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆ.சரவணன் தலைமையில் கோட்டாட்சியர் விமலாவிடம் அளிக்கப்பட்டது. 
அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:   விநாயகர் சிலை ஊர்வலம் வழக்கமாகச் செல்லும் பாதையை மாற்றி, வேறு பாதையில் காவல் துறையினர் அழைத்துச் செல்கிறார்கள். இதனால், அந்தப் பகுதியில் வசிக்கும் பெரும்பான்மையான இந்து மதத்தினர் விநாயகர் சிலை ஊர்வலத்தை கண்டு, வழிபட முடியாமல் போகிறது. 
விநாயகர் சிலை ஊர்வலம் செல்ல எந்தவித எதிர்ப்பும் இதுநாள் வரை தெரிவிக்கப்படவில்லை.  
ஏற்கெனவே இப்பகுதியில் பணிபுரிந்த காவல்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலால் விநாயகர் சிலை ஊர்வலப் பாதை மாற்றப்பட்டுள்ளது.
செய்யாறு நகரில் காந்தி சாலைப் பாதையில்தான் பல்வேறு மதத்தினர் திருவிழா ஊர்வலத்தை  நடத்துவது வழக்கம். 
அதேபோன்று, விநாயகர் சிலை ஊர்வலத்தையும் அதே பாதையில் செல்ல அனுமதிக்க வேண்டும்.  இந்தக் கோரிக்கையை பரிசீலனை செய்து வரும் செப்.5-ஆம் நடைபெறவுள்ள விநாயகர் சிலை ஊர்வலத்தை குறிப்பிட்ட பாதையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி வட்டாட்சியர் ஆ.மூர்த்தியிடமும் மனு அளித்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT