திருவண்ணாமலை

விநாயகர் சிலைகளை கரைக்கும் இடங்கள் அறிவிப்பு

4th Sep 2019 10:12 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் புதன்கிழமை விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன. இந்தச் சிலைகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ள ஏரி, குளங்களில் மட்டுமே கரைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
அதன்படி, திருவண்ணாமலை தாமரை குளம், செங்கம் சிங்காரப்பேட்டை ஏரி, கோனேரிராயன் குளம்,  ஐந்து கண் வாராபதி, பூமா செட்டி குளம், போளூர் ஏரி, கூர் ஏரி ஆகிய நீர்நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT