திருவண்ணாமலை

மாணவர்களுக்கு பாராட்டு விழா

4th Sep 2019 10:12 AM

ADVERTISEMENT

வந்தவாசியை அடுத்த குண்ணகம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், கடந்த 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் கு.அ.கமலக்கண்ணன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் வ.மணி வரவேற்றார்.
ஆக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் மூ.சங்கர் 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களையும், 100 சதவீதம் தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களையும் பாராட்டி கேடயம் வழங்கினார். 
அனக்காவூர் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ப.செல்வராஜ் திறன்மிகு வகுப்பறையை திறந்து வைத்தார். விழாவில் சி.ம.புதூர் பெண்கள் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சு.திருவேங்கடம், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ரா.ரவி மற்றும் சு.ராகவன், கே.எ.துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி ஆசிரியர் பா.சுரேஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆசிரியர் ப.மனோகர் நன்றி தெரிவித்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT