திருவண்ணாமலை

பள்ளி அருகே மதுக் கடையை திறக்க மாணவர்கள் எதிர்ப்பு 

4th Sep 2019 10:12 AM

ADVERTISEMENT

செங்கத்தில் பள்ளி அருகே மதுக் கடையைத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்கள் வட்டாட்சியரிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனர். 
செங்கத்தை அடுத்த தளவாநாய்க்கன்பேட்டை பகுதி புதுப்பட்டு சாலையில் டாஸ்மாக் மதுக் கடைகள் இரண்டு இயங்கி வருகின்றன. இவை அப்பகுதி பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகக் கருதி, அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று,  ஒரு கடையை  வேறு இடத்துக்கு மாற்ற டாஸ்மாக் ஊழியர்கள் இடத்தை தேர்வு செய்து வந்தனர்.
இந்த நிலையில், அந்தக் கடை இருந்த பகுதிக்கு அருகாமையில் குப்பனத்தம் சாலையில் வேறு கட்டடத்துக்கு கடையை வரும் செப்.8ஆம் தேதி மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்றன.
 அப்பகுதியில் இரண்டு தனியார் பள்ளிகள் இயங்குகின்றன. மேலும், அங்குள்ள பேரூராட்சி குப்பைக் கிடங்கில் மகளிர் குழு பெண்கள் வேலை செய்து வருகிறார்கள்; பக்கத்தில் விவசாய நிலம் உள்ளது. 
மதுக் கடை திறந்தால் பள்ளிக்குச் செல்லும் மாணவிகள், விவசாய நிலத்தில் வேலைசெய்யும் தொழிலாளிகள், பெண்களுக்கு இடையூறு ஏற்படும்,
 மேலும், பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் மாலை நேரத்தில் சிறப்பு வகுப்பு முடித்து வரும்போது, பல்வேறு இடையூறுகளைச் சந்திக்க நேரிடும்.
இதைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள மகரிஷி மேல்நிலைப் பள்ளி மாணவிகள், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், பள்ளி நிறுவனர் புவனேஸ்வரி தலைமையில் செங்கம் வட்டாட்சியர் பார்த்தசாரதியிடம் அப்பகுதியில் மதுக் கடை திறக்கவேண்டாம் என வலியுறுத்தி,  அதுகுறித்த கோரிக்கை மனுவை அளித்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT