திருவண்ணாமலை

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

4th Sep 2019 10:10 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, திருவண்ணாமலை தொகுதி மக்களவை உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி, மாவட்டப் பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், ஜவ்வாதுமலை தெற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த அதிமுக மாவட்டப் பிரதிநிதி ஏ.சிவானந்தம் தலைமையில் எஸ்.அருணாச்சலம், எல்.குப்பன், வி.பெருமாள், வி.லட்சுமணன், சி.திருப்பதி, ஆர்.வெங்கட்ராமன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் அந்தக் கட்சியில் இருந்து விலகி, தமிழக முன்னாள் அமைச்சரும், மாவட்ட திமுக செயலருமான எ.வ.வேலு முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இவர்களுக்கு எ.வ.வேலு சால்வை அணிவித்து, வரவேற்றார். விழாவில், திமுக ஒன்றியச் செயலர் சே.சிவசேமன், நகரச் செயலர் ப.கார்த்திவேல்மாறன், ஒன்றியச் செயலர்கள் த.ரமணன், ப.அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT