திருவண்ணாமலை

சொர்ண கலச குபேர லட்சுமி பூஜை

4th Sep 2019 10:13 AM

ADVERTISEMENT

வந்தவாசி கேசவ நகர் ஆன்மிக இளைஞர் குழு சார்பில், சொர்ண கலச குபேர லட்சுமி பூஜை, சௌபாக்கிய லட்சுமி அர்ச்சனை ஆகியவை திங்கள்கிழமை மாலை நடைபெற்றன. 
  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்த அமைப்பு சார்பில் கேசவ நகர், ஜனார்த்தன முதலி தெருவில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை முன் இந்த பூஜை நடைபெற்றது. 
  மாம்பட்டு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் அறக்கட்டளைச் செயலர் ஆறு.லட்சுமண சுவாமிகள் பூஜைகளை நடத்தினார். இதில் அந்தப் பகுதி பெண்கள், பொதுமக்கள் மற்றும் ஆன்மிக இளைஞர் குழுவினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT