திருவண்ணாமலை

செய்யாறு புதிய மாவட்டம்:  தமுமுக வலியுறுத்தல்

4th Sep 2019 10:10 AM

ADVERTISEMENT

செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என தமுமுக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
செய்யாறு நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் அன்மையில்  நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் தஸ்திகீர் தலைமை வகித்தார். செயலர் சாதிக் பாட்ஷா வரவேற்றார்.  துணைத் தலைவர் அப்துல், துணைச் செயலர்கள் ரஹ்மத்துல்லாஹ் கான், மஸ்தான், கெளஸ் பேக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் அப்பாஸ் பங்கேற்று, கட்சியின் தற்போதைய சூழல்கள், முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்துப் பேசினார்.
கூட்டத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி, சேத்துப்பட்டு ஆரணி ஆகிய பகுதிகளை ஒன்றிணைத்து புதிதாக வருவாய் மாவட்டத்தை உருவாக்க வேண்டும். 
செய்யாறு நகரில் இயங்கி வரும் நியாய விலைக் கடை கடை அமுதம் 1ஐ இரண்டாகப் பிரித்து காமராஜ் நகர், கம்பன் நகர், காந்தி சாலை ஆகிய பகுதிகளை ஒன்றிணைத்து காமராஜ் நகர் பகுதியில் புதிதாக ஒரு நியாய விலைக் கடையைத்  திறக்க வேண்டும். 
செய்யாறு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் சர்வ சாதாரணமாக விற்கப்படுகிறது. காவல் துறை இதை தடுத்து அதில் ஈடுபடுபவர்களை கைது செய்ய வேண்டும். 
செய்யாறில் அரசு தொடக்கப் பள்ளி ஒன்றை  தத்தெடுத்து பள்ளிக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT