திருவண்ணாமலை

கேரம் போட்டி: 500 மாணவர்கள் பங்கேற்பு

4th Sep 2019 10:09 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை எஸ்.முருகையன் நினைவு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டிகளில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் வட்ட அளவிலான பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை எஸ்.முருகையன் நினைவு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் வட்ட அளவிலான கேரம், டெனிகாய்ட் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. பள்ளி அறக்கட்டளைத் தலைவர் சீனி.கார்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு போட்டிகளைத் தொடக்கிவைத்தார். 
மாவட்ட விளையாட்டு ஆய்வாளர் முத்துவேல் மேற்பார்வையில் நடைபெற்ற கேரம், டெனிகாய்ட் விளையாட்டுப் போட்டிகளில் அரசு, தனியார் பள்ளிகளில் பயிலும் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர்.  பரிசளிப்பு விழாவில், பள்ளி நிர்வாகி அருள்விழி மற்றும் பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT