திருவண்ணாமலை

குளம் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

4th Sep 2019 10:12 AM

ADVERTISEMENT

போளூர் வட்டம், ஆர்.குண்ணத்தூர் ஊராட்சியில் உள்ள வெடியாமூஞ்சி குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
 போளூர்-பொத்தரை சாலையில் ஆர்.குண்ணத்தூர் ஊராட்சி உள்ளது. இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பொதுமக்களின் வசதிக்காக  50 சென்ட் நிலத்தில் வெடியாமூஞ்சிகுளம் அமைத்துள்ளனர். இந்தக் குளத்தை  சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டி வருகின்றனர். மேலும், சிலர் நிலமாக்கி வருகின்றனர். 
இதுகுறித்து கிராம பொதுமக்கள் வட்டாட்சியர் ஜெயவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என பல்வேறு இடங்களில் புகார் மனு அளித்துள்ளனர். ஆனால், அதன் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். 
அதனால், ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் குளத்தை தூர்வாரி  மழைநீர் சேகரிப்பை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.  
குளத்தில் வீடு கட்டி வருவது குறித்து வட்டாட்சியர் ஜெயவேலுவின் கவனத்துக்கு கொண்டு சென்றபோது, அவர் துறை அலுவலர்களை உடனடியாக தொடர்பு கொண்டு இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறேன் எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT