திருவண்ணாமலை

கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு

4th Sep 2019 10:11 AM

ADVERTISEMENT

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக அளவில் 4 தங்கப் பதக்கங்களுடன் சிறப்பிடம் பெற்ற திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் 39 மாணவ-மாணவிகளுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
 இந்த நிலையில், 2018-19 ஆம் கல்வியாண்டில் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் நடத்திய தேர்வுகளின் முடிவுகள் அண்மையில் வெளியானது. இதில், திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகள் 39 பேர் தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்தனர்.
4 பேருக்கு தங்கப் பதக்கம்: கல்லூரியின் வணிகவியல் (நிதி மற்றும் கணக்கியல்) மாணவி எம்.பிரியங்கா, தகவலமைப்பு மேலாண்மையியல் மாணவர் எஸ்.தனுசு, மென்பொருள் கணினி அறிவியல் மாணவி டி.சந்தியா, நுண்ணுயிரியல் மாணவி பி.கல்பனா ஆகியோர் அதிக மதிப்பெண்கள் எடுத்து, பல்கலைக்கழக அளவிலான தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்து, தங்கப் பதக்கம் வென்றனர். இவர்களைத் தவிர மேலும் 35 பேர் அதிக மதிப்பெண்கள் பெற்று பல்கலைக்கழக அளவிலான தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளனர். 
இந்த நிலையில், தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கான பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை கல்லூரியில் நடைபெற்றது. 
விழாவுக்கு கல்லூரித் தலைவர் எம்.என்.பழனி தலைமை வகித்தார். செயலரும், தாளாளருமான என்.குமார், பொருளாளர் கோ.ராஜேந்திரகுமார், கல்விப்புல முதன்மையர் அழ.உடையப்பன், முதல்வர் கே.ஆனந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்வில் சிறப்பிடம் பெற்ற 39 மாணவ-மாணவிகளைப் பாராட்டிப் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், கல்லூரி துணை முதல்வர் கோ.அண்ணாமலை மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT