திருவண்ணாமலை

ஏரியில் பனை விதைகள் நடும் பணி

4th Sep 2019 10:11 AM

ADVERTISEMENT

கீழ்பென்னாத்தூரை அடுத்த சிங்கவரம் கிராமத்தில் உள்ள ஏரியில், ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ், 5 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சமூக ஆர்வலர்கள், ராக்பாய்ஸ் சமூக நற்பணி மன்ற நிர்வாகிகள், பொதுமக்கள் இணைந்து இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 
நிகழ்ச்சி தொடக்க விழாவுக்கு, சமூக ஆர்வலர் ஆர்.கணபதி தலைமை வகித்தார். ஊராட்சிச் செயலர் தங்கராசு, சமூக ஆர்வலர் அரிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காலை முதல் மாலை வரை ஒரே நாளில் ஏரியின் இருபுறங்களிலும் 
5 ஆயிரம் பனை விதைகள், 100-க்கும் மேற்பட்ட வேப்ப மரக்கன்றுகளையும் நட்டனர். நிகழ்ச்சியில், சமூக 
ஆர்வலர்கள் லெனின், சுப்பிரமணி, சி.கணபதி, கே.முருகன், ராமகிருஷ்ணன், சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT